அனைவருக்கும் சம அளவில் சட்டம்!
அனைத்து தரப்பினருக்கும் சம மட்டத்திலேயே சட்டத்தை அமுல்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார்.
எந்தவொரு நபருக்கும் அநியாயம் இடம்பெறுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கிரிந்தை புதிய பொலிஸ் நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.