பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்!
பேஸ்புக் மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு செயலிகளை ஒன்றிணைக்கும் பட்சத்தில் வட்ஸ் அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளளது.
குறுந்தகவல் அனுபவத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதால் இதன்மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான அப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை மேலும் பலப்படுத்த முடியும் எனப்படுகிறது.