வவுனியாவில் புதையல் தோண்டிய ஒருவர் கைது!
வவுனியா, பூவரசங்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா, செக்கடிப்புலவு – குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஒருவரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய மின்பிறப்பாக்கி, கிடங்கு தோண்டுவதற்குப் பயன்படும் பொருட்கள், மண் அகழ்வதற்கான உபகரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதையல் தோண்டிய ஏனைய ஏழு பேர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

