குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ள விமல்!
குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான கொலை சதி திட்டம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த சதித்திட்டம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் மாதிரி அண்மையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.