நான் தயார்: நீங்கள் தயாரா? திருமண வீட்டில் நடந்த உரையாடல்?

நான் தயார்: நீங்கள் தயாரா? திருமண வீட்டில் நடந்த உரையாடல்?

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே உள்ளேன், நீங்கள் தயாரா? என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் ரணில் கலந்து கொண்டார்.

அவரை ராஜபக்ச குடும்பத்தினர் வரவேற்று மகிழ்வுடன் அளவளாவிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தன.

அதில் ரணிலும், ராஜபக்ச சகோதர்களின் ஒருவரான கோத்தபாயவும் நெருங்கி நின்று உரையாடும் படமும் வெளிவந்திருந்தது.

இருவரும் என்ன பேசினார்கள் என்று ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் தயாரா? என்று பிரதமரிடம் கோத்தபாய கேட்டுள்ளாராம்.

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர்தான் களமிறங்கக் போகின்றார் போல் தெரிகின்றது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று அமைச்சர் மங்கள கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net