இந்து முறைப்படி இடம்பெற்ற மஹிந்த புதல்வரின் திருமணம்!
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த ரோஹித – டட்யானா இருவரும் கடந்த 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டிய கிராமத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
முதலில் பௌத்த முறைப்படி திருமணத்தில் இணைந்த இருவரும் நேற்று பம்பலப்பிட்டி தூய மேரி தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் தமிழ் பாரம்பரியத்திற்கு அமைய புதுமண தம்பதியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
அத்தோடு மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழர் கலாசார உடையணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.















