உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம் வெளியானது!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக்கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தினால் இந்த பயணக்கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து – யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் உத்தரதேவி ரயில் புறப்பட்டு செல்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.