ஞானசார தேரரை பொது மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய வேண்டாம்!

ஞானசார தேரரை பொது மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய வேண்டாம்!

ஞானசார தேரரின் பெயரைப் பொது மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கப் பரிந்துரை செய்ய வேண்டாம் என மனு அளித்துள்ளார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சரை (திங்கட்கிழமை) நேரில் சந்தித்துக் குறித்த மனுவைக் கையளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையிலேயே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு அளிக்கக்கூடாதென சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net