நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார்!
அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தேசிய சமயங்களுக்கான மாநாடு (திங்கட்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் அமெரிக்க அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் யொஹான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.