நிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
நிதி ஆணைக்குழுவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று (29) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை அதன் தலைவர் யு.எச்.பலிஹக்காரவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.டி.எம்.யு.டி.பி. தென்னகோன் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.