மைத்திரியின் கட்சியை சேர்ந்தவரின் மனைவி விபத்தில் மரணம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அரசியல்வாதியின் மனைவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் மனைவி உயிரிழந்துள்ளார்.
கருகஸ்வெவ பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பீ.நிஹால் பெர்ணான்டோவின் மனைவியான தில்ருக்ஷி என்ற 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தில்ருக்ஷி நேற்று உயிரிழந்துள்ளதாக புத்தள வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது மோட்டார் வாகனம் வீதியை விட்டு விலகியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.