இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தேடப்பட்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) கொலைக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கான தண்டனையை உறுதிசெய்வதற்கான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர் கொலைகள் தொடர்பாக மக்ஆர்தர் (வயது-67) மிக நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் மீது கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் முன்னாள் காதலி, இரு ஆப்கான் குடியேற்றவாசிகள், இலங்கையை சேர்ந்த இரு அகதிகள் மற்றும் ஈரான், துருக்கி பிரஜைகள் ஆகியோரே சந்தேகநபரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net