இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன!

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன!

இலங்கை கிரிக்கெட் ‘ஏ’ அணியின் பயிற்றுவிப்பாளரான அவிஷ்க குணவர்தன தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அணியின் பயிற்றுவிப்பளாராகவுள்ள ஜோன் லூயிஸ் குடும்ப விடயம் காரணமாக சென்றிருப்பதால் அவர் திரும்பி வரும் வரை பதில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவிஷ்க குணவர்தன இன்று (30) இரவு அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ளதுடன் அங்கு நடைபெறும் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடியும் வரை பயிற்றுவிப்பளாராக செயற்படவுள்ளார்.

இப்போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (24-28) அவுஸ்திரேலிய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net