பலஸ்தீன் பிரதமர் இராஜினாமா!

பலஸ்தீன் பிரதமர் இராஜினாமா!

பலஸ்தீன் பிரதமர் றாமி ஹம்தல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ளார்.

பிரதமரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் வரை நாட்டில் காபந்து அரசாங்கம் செயற்படும் என்றும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்வரை அரசாங்கத்தின் கடமைகளும், பொறுப்புகளும் தொடரும் என ஹம்தல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பான பலஸ்தீன குழுக்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக விரைவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Copyright © 4077 Mukadu · All rights reserved · designed by Speed IT net