மஹிந்தவின் தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சோமநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வஜிராஷ்ரம விகாரையில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது நிலவும் குழப்பநிலைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.
எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டுமானால் மஹிந்தவின் தலைமைத்துவமே பொருத்தமானது.
எனவே அவர் குறிப்பிடுபவரையே வேட்பாளராகத் தெரிவு செய்வது சிறந்தது” என சோமநந்த தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.