இலங்கை இளைஞர்களை குறி வைக்கும் ரம்பா!

இலங்கை இளைஞர்களை குறி வைக்கும் ரம்பா!

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வைரஸ் பரவி வருவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரம்பா என பெயரிடப்பட்டு இந்த வைரஸ், இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அவதானம் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net