புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பு!

விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பு!

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் பிரதான நோக்கம் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவைப்பாடென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இந்த பூமி இளைஞர் யுவதிகளுக்கு புதிய இடமல்ல. இதில் பல இளைஞர்கள் போராடி மடிந்துள்ளனர்.

அந்தவகையில் 1988- 1989 காலப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகளை அதிலிருந்து திசைதிருப்பி நல்வழிபடுத்தியவர் எனது தந்தை .

அப்போது எனது தந்தையுடன் சேர்ந்து கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கடத்தி செல்லப்பட்ட இளைஞர்களை அழைத்து வந்ததுடன், அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளோம்.

அத்தகைய சிறந்த பூயே இலங்கையாகும். ஆனால் தற்போது மணி, யானை புலி ஆகிய சின்னங்களை கொண்ட கட்சிகளே நாட்டை நாசமாக்கின்றது.

இதேவேளை நாட்டின் நலனுக்காக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு விடுததைலைப் புலிகளின் தேவைப்பாகும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் உடந்தையாக இருக்கின்றது.

ஆகையால் குறித்த சதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவராவிடின் நாட்டை பாதுகாக்க முடியாது.

இதனால் இளைஞர் யுவதிகளும் இவைகளை கருதிற்கொண்டு செயலாற்ற வேண்டும்” என பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net