கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

பல நாடுகளில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் ஊழியர்கள் தமது பயணிகளின் களைப்பை போக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பான பிளேஷ் மொப் என்ற நடவடிக்கை மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது.

விமான நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது விமான நிலைய ஊழியர்கள் பிரபல பாடலுக்கு திடீரென நடனமாடுகின்றனர்.

இது உலகின் பிரதான விமான நிலையங்களான துபாய், லண்டன் ஹீத்ரு, அட்லாண்டா, டெல்லி போன்ற விமான நிலையங்களில் மட்டுமல்லாது பல விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கையிலும் இந்த முறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தாய் லயன் விமான நிறுவனம் இலங்கைக்கும் பேங்கொக்கிற்கும் இடையில் நேற்று விமான பயணத்தை ஆரம்பித்த போது கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் திடீரென நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துள்ளனர்.

விமான நிலைய ஊழியர்களின் நடனம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபலமாகி வருகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net