டிசம்பர் 7இல் ஜனாதிபதி தேர்தல்?

டிசம்பர் 7இல் ஜனாதிபதி தேர்தல்?

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 22ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது,

இந்தநிலையில் அன்றைய தினம் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, டிசம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net