மைத்திரி இறந்துவிடுவாரென ஆரூடம் கூறிய ஜோதிடர் விடுதலை!

மைத்திரி இறந்துவிடுவாரென ஆரூடம் கூறிய ஜோதிடர் விடுதலை!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இறந்துவிடுவாரென திகதி குறிப்பிட்டு இணையத்தளம் ஊடாக ஆரூடம் கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ​ஜோதிடர், அக்குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று (வியாழக்கிழமை) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை விசாரித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் திகதி ஜனாதிபதி இறந்துவிடுவாரென கூறியிருந்த குறித்த ஜோதிடர், பின்னர் அவரது இறப்பு குறித்து வேறொரு திகதியையும் குறிப்பிட்டு இணையத்தளம் ஊடாக பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net