கொழும்பில் உணவை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி!

கொழும்பில் உணவை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி!

கொழும்பிலுள்ள பிரபல தனியார் உணவக உரிமையாளர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் கொள்வனவு செய்த வெதுப்பக உணவு ஒன்றுக்குள் சட்டை ஊசி காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கினை நேற்று விசாரித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன், வெதுப்பக உணவினை கொள்வனவு செய்த பெண்ணுக்கு நஷ்டஈடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் மருதானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் , அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்தே குறித்த பெண் உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net