ஜனாதிபதியால் தேர்தலில் வெற்றியடைய முடியாது!

ஜனாதிபதியால் தேர்தலில் வெற்றியடைய முடியாது!

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாத சூழ்நிலையே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமைக்கு குமார வெல்கம கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை குமார வெல்கம தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு மாத்திரமே தகுதியுள்ளதாக கட்சி அறிவித்துள்ளதாக அதன் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4314 Mukadu · All rights reserved · designed by Speed IT net