பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு!

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு!

இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையக் காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி வழங்கி ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோருக்கான குறைந்தபட்ச வேதன அளவு ஒன்றை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகவுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க பணியாளர்களை மத்தல விமான நிலையம் ஊடக அனுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களை சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பணியாளர்களை மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு அனுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net