2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் மீட்பு!
புறக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே சுமார் நான்கு இலட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி இரண்டு கோடி ரூபா எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.