பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போதே குறித்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதவான் எம்மா அரபுத்னொட் அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது பிரித்தானியாவிலிருள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ அவர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பாக கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் அவர் நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அவருக்கெதிரான பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net