சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர். லோக்கல்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர். லோக்கல்’

சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய திரைப்படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ். எம் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று (சனிக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 13ஆவது திரைப்படமாகும்.

ஹிப் ஹொப் தமிழா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னையிலிருந்து பாரீஸுக்கு செல்லும் கதாநாயகன், அங்கு சந்திக்கும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதை.

நகைச்சுவை, அதிரடி, காதல் உள்ளிட்ட அம்சங்களுடன், திரைப்படங்களுக்கு ஏதுவான அம்சங்களும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதென படக்குழு குறிப்பிடுகிறது.

தற்போது விறுவிறுப்பாக நடைபெறும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net