நானே என்றும் ராஜா! மைத்திரிக்கு இடமில்லை!

நானே என்றும் ராஜா! மைத்திரிக்கு இடமில்லை!

தேர்தலை இலக்கு வைத்து ஏற்படுத்தப்படவுள்ள கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிகாரம் தனக்கே கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதும் தான் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரிய மல்வத்து பீடாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரால் நிறைவேற்றப்பட்ட யோசனை துமிந்த திஸாநாயக்கவின் தனிப்பட்ட யோசனை ஆகும்.

தான் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக திட்டமிடவில்லை எனவும் இன்னமும் அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதுவரை காலமும் சுதந்திர தின நிகழ்வு என கொண்டாடிய போதிலும் இம்முறை சுதந்திர தினமா அல்லது தேசிய தினமாக கொண்டாடுகின்றோம் என்பது இன்னமும் எனக்கு புரியவில்லை.

நாட்டில் சுதந்திரம் இல்லாத காரணத்தினால் தேசிய தின நிகழ்வு என பெயரிட்டிருக்கலாம் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்பிலும் ஆளும், எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net