பிரிகேடியர் மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்காவின் நிலைமை!

பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்காவின் நிலைமை!

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை விலக்கிக் கொண்டிருப்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,

“பிரித்தானியாவின் சட்டமுறைமைக்குள் தலையீடு செய்ய நாங்கள் விரும்பவில்லை.

சிறிலங்கா அதிகாரிக்கு விலக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக சட்டக் கோட்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.

லண்டனில் கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார் என, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீது வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net