மலையக மக்களுக்காக துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் வவுனியா பிரதாபன்.

மலையக மக்களுக்காக 2125 கிலோ மீற்றர் துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் வவுனியா பிரதாபன்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தோட்ட தொழிலார்களின் ஆயிரம் ரூபா சம்பளம் உயா்வு,மற்றும் லயன்களில் குடியிருக்கும் தோட்ட தொழிலாளர்களிற்கான நிரந்தர வீடு அமைத்து கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை ரீதியில் திரு தர்மலிங்கம் பிரதாபன் அவர்களால் 2125 km தூரம் துவிச்சக்கர வண்டியில் 32 நாட்கள் சுற்றி வலம்வரும் சாதனை பயணம் 10.02.2019 இன்று கோவில்குளம் சிவன்கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

பிரதாபன் கோாிக்கையை நிறைவேற்ற அரசும்,தொழில் சங்கங்களும் முன்வரவேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net