2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம்.

2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம்.

2018ம் ஆண்டிற்கான க. பொ. த. உயர்தர பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கென பரீட்சை திணைக்களத்திற்கு 65,000பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2018ம் ஆண்டு இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 7,23,000 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களுள் 1,65,000பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையை பெற்றுள்ளனர்.

பரீட்சை மோசடிகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில் திருப்தியடையாத 65, 000 பரீட்சார்த்திகள் மீளாய்வுக்கென விண்ணப்பித்ததன் அடிப்படையில் அவர்களின் விடைப்பத்திர மீளாய்வு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கும் எனவும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net