நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாயினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாயினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net