இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்!

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்!

2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை புது டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ‘அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பெங்களூறிற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7875 Mukadu · All rights reserved · designed by Speed IT net