ஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நேற்று நினைவேந்தல் .
ஈழத்தமிழர் படுகொலையை 2009ல் நிறுத்த கோரி இதே நாள் ஜெனிவாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தீக்குளித்து தன்னை ஈழ விடுதலைக்கு ஆகுதி ஆக்கிய ஈகை பேரொளி முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஜெனிவாவில் நடை பெற்றது.
முருகதாசன் தன்னை ஆகுதி ஆக்கிய நிலமான ஜெனிவா முருகதாசன் திடலில் புலம் பெயர் உணர்வாளர்கள் ஒன்று கூடி வணக்கம் செலுத்தினர்.




