நானாட்டானில் பயிற்றைச் செடிகளில் நோய்த்தாக்கம்!!

நானாட்டானில் பயிற்றைச் செடிகளில் நோய்த்தாக்கம்!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு, அருவியாறு, மடுக்கரை போன்ற கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கையான பயிற்றை, கத்திரி, மிளகாய் என பல விதமான மரக்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இங்கு பயிற்றஞ் செடிகளில் திடீரென இனந்தெரியாத நோய்த்தாக்கம் ஏற்பட்டு இலைகள் முழுவதும் ஒருவகை பூச்சுகளால் அரிக்கப்பட்டு செடிகள் வாடி விழுகின்றன.கிருமி நாசினிகளைத் தெளித்தும் நோய்த்தாக்கம் கட்டுப்படவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பூச்சித்தாக்கம் தொடர்பாக பார்வையிட்ட நானாட்டான் பிரதேச போதனாசிரியர், இந்த பூச்சி தாக்கம் கடும் வெய்யிலினாலும் பயிர்களுக்கு போதியளவு இடை வெளி இல்லாமல் நெருக்கமாக காணப்படுவதாலும் ஏற்படுகிறது.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கை முறை பீடை விலக்கிகளான நஞ்சற்ற தாவர பீடை விலக்கியான வேப்பம் இலை கரைசலைப் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.

இரசாயன மருந்து எனில் விவசாய போதனாசிரியர்களின் சிபாரிசுக்கு அமைவாக கோரஜன் போன்றவை பாவிக்கமுடியும்.

பிரதேசத்தில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அணுகி அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net