குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! சிசிடிவி இணைப்பு

குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! சிசிடிவி இணைப்பு

கொழும்பு, கிரான்பாஸ் மெல்வத்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஆஷா பாரி எனும் குடு சூடி என்ற பெண்ணே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

குறித்த பெண் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதுடன் கஞ்சிபானை இம்ரானின் திருட்டு மனைவி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்வத்தில் காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net