அப்பாவின் கனவுடன் இருப்பேன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது ஊடகப்பணியில் இருந்த நாட்டுப்பற்றாளர் சத்திமூர்த்தி சிறீலங்காப்படையின் குண்டு வீச்சில் மரணத்ததார்.
அவருடைய பத்தாண்டு நினைவேந்தல் தாயகத்திலும் புலம் பெயர் மண்ணிலும் அனுட்டிக்கப்பட்டது
புலம்பெயர் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தலில் சத்தியமூர்த்தியின் மகள் தந்தை பற்றி நினைவு மீட்டினார்.
தந்தையார் கொல்லப்படும் இரண்டரை வயது குழந்தையாக இருந்தவர்.
பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு சிறுமியாக தன் தந்தையின் கனவை தான் சுமந்திருப்பேன் என்றும் தந்தையை போல கொல்லப்பட்டவர்களுக்காக பாடுபடுவேன் என்றும் தன் சிறு நினைவு மீட்டலில் தெரிவித்தார்.







