குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

குறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு! மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

அறி­வித்­த­தைப் போன்று நெல் சந்­தைப்­ப­டுத்­தும் அதி­கா­ர­ சபை நெல்­லைக் கொள்­வ­னவு செய்­யா­த­தால் குறைந்த விலை­யில் தனி­யா­ரி­டம் நெல்லை விற்க வேண்­டிய நிலை­யில் மன்­னார் மாவட்ட விவ­சா­யி­கள் உள்­ள­னர்.

கால­போக நெற் செய்­கை­யின் அறு­வ­டை­கள் முடி­யும் நிலை­யில் உள்­ள­ளன. வடக்கு மாகா­ணத்­தில் நெல் சந்­தைப் படுத்­தும் சபை, கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் மூலம் விவ­சா­யி­க­ளு­டைய நெல்­க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தாக அந்­தந்த மாவட்­டச் செய­ல­கங்­கள் தெரி­வித்­தன.

நெல் சந்­தைப்­ப­டுத்­தும் சபை­யா­னது வடக்கு மாகா­ணத்­தில் உள்ள விவ­சா­யி­க­ளி­டம் இருந்து இந்த பெரும்­போ­கத்­தில் 40 ஆயி­ரத்து 800 மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ளது என்­றும், ஒரு கிலோ சம்பா 41 ரூபா­வுக்­கும், ஒரு கிலோ நாட்டு 38 ரூபா­வுக்­கும் நெல் கொள்­ள­வ­னவு செய்­யப்­ப­ட­வுள்­ளன என்­றும் அதற்­காக மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு நிதி விடு­விக்­கப்­பட் டுள்­ளன என்­று தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்கு மாகா­ணத்­தின் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் முத­லில் நெல் கொள்­வ­ன­வு­கள் இடம்­பெற்­றன. தொடர்ந்­தும் ஏனைய மாவட்­டங்­க­ளில் கொள்­வ­னவு இடம்­பெற்­றது. மன்­னார் மாவட்­டத்­தில் இது­வரை எந்த ஒரு விவ­சா­யி­யிடமிருந்­தும் நெல் கொள்­வ­னவு செய்­யப்­ப­ட­வில்லை.

மன்­னார் மாவட்­டத்­தில் விவ­சாய பெரு­நி­லப்­ப­ரப்­பாக உள்ள நானாட்­டான், மாந்தை, முசலி, மடு போன்ற பகு­தி­க­ளில் பெரும்­போக நெற்­செய்­கை­யின் முதல் கட்ட அறு­வ­டை­கள் பர­வ­லாக இடம் பெற்று வரு­கி­ன்றன.

நெல்­சந்­தைப்­ப­டுத்­தும் அதி­கார சபை நெல் கொள்­வ­ன­வில் இன்­னும் ஈடு­ப­டாத கார­ணத்­தால் தனி­யார் வியா­பா­ரி­கள் சிவப்பு வெள்ளை சம்பா போன்­ற­வற்றை, 2ஆயி­ரத்து 100 அல்­லது 2ஆயி­ரத்து 200 ரூபா­வுக்­கும், கீரி சம்பா 3 ஆயி­ரத்து 600 ரூபாய்க்­கும் கொள்­வ­னவு செய்­துள்­ள­னர்.

தற்­போது அவற்­றை­யும் கொள்­வ­னவு செய்­வதை நிறுத்தி விட்­டார்­கள். இத­னால் அறு­வ­டை­செய்த நெல் மூடைகளை வரம்­பு­க­ளின் மீது அடுக்கி வைத்து காவல்­காக்­கின்­ற­னர் மன்­னார் மாவட்ட விவ­சா­யி­கள்.

“விவ­சா­யத்துக்காக பட்ட கடன்­கள் அதற்­கான வட்­டி­கள் ஒரு புறம் குடும்­பச் செலவு மறு­பு­றம் எங்­க­ளைத் தாக்­கு­கிறது மாதக்­க­ணக்­கில் இரவு பக­லா­கப் பாடு­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு பலன் எது­வும் கிடைப்­ப­தில்லை.

எந்­தக் கஷ்­டங்­க­ளும் அனு­ப­விக்­காத முத­லாளி மார் பலனை அனு­ப­விக்­கின்­றார்­கள். அரசு கூறி­யது போல் விரைவாக நெல்­சந்­தைப்­ப­டுத்­தும் அதி­கார சபை மூலம் விவ­சா­யி­க­ளி­டம் இருந்து நெல்லை நியாய விலைக்கு கொளவனவு செய்து விவ­சா­யி­களை கஷ்­டத்­தி­லி­ருந்து மீட்க வேண்­டும் என்று விவ­சா­யி­கள் பெரு­மூச்­சு­விட்­ட­னர்.

“மன்­னார் மாவட்­டத்­தில் அறு­வ­டை­கள் நிறைவு பெறா­த­தன் கார­ணத்­தா­லேயே நெல்­சந்­தைப்­ப­டுத்­தும் சபை கொள்வ­ன­வில் ஈடு­ப­ட­வில்லை.

வழ­மை­யாக மன்­னார் மாவட்­டத்­தில் இறு­தி­யா­கத்­தான் கொள்­வ­னவு இடம்­பெ­றும். எதிர்­வ­ரும் புதன் கிழமை கண்டி­யில் இது தொடர்­பான கலந்து­ரை­யா­டல் ஒன்று உள்­ளது.

அதை அடுத்­துத்­தான் எப்­போது மன்­னா­ரில் கொள்­வ­னவு ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரும் என்று நெல் சந்தைப்­ப­டுத்­தும் சபை­யின் கிளி­நொச்­சிப் பிராந்­திய அலு­வ­ல­கத்­தி­னர் தெரி­வி­த்த­னர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net