மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது!

மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது!

போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை பகுதியில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாகந்துர மதுஷின் சொத்துக்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதென பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் மதுஷின் வங்கிக் கணக்குகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

டுபாயிலுள்ள விடுதியொன்றில் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 15 பேரும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net