//anjeng இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்! | Mukadu

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்!

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்!

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்கள் சமூக ஊடக பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் செஹிர் மிர்ஸா #AntiHateChallenge எனும் இந்த பிரசாரத்தை துவங்கியுள்ளார்.

நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன், எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கையில் ஏந்தி முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack உள்ளிட்ட ஹேஸ்டேகுகளை பதிவிட்டு இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் பல பெண்களும் இந்தியர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net