வங்காள விரிகுடாவில் சாக்கடல் : இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்! இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து!

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பிரதேசத்தில் 60000 சதுர கிலோ மீற்றர் அளவில் சாக்கடல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு பாரிய ஆபத்து ஏற்படக் கூடும் என முன்னாள் கடற்படை தளபதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

காலி மஹிந்த வித்தியாலயத்தில் விசேட உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாக்கடல் உருவாகும் காரணமாக இலங்கை உட்பட சில நாடுகளுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது.

சாக்கடலில் எந்தவித உயிரினங்களும் இல்லாமையினால் ஒக்ஸிஜன் இதனால் நைதரசன் வாயு வெளியேற்றப்படுகிறது.

அதிகரித்த நைதரசன் காரணமாக, தரைமட்ட மற்றும் நிலத்தடி நீர் மாசு, கடல் இறப்புப் பகுதி ஏற்படுதல், புவி சூடாதலை அதிகரிக்கச் செய்தல் உட்பட பல உயிர்த்துடிப்புள்ள சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அமில மழை பெய்யும் ஆபத்து உள்ளதால், அது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

தற்போது இலங்கை மாத்திரமின்றி உலகம் முழுவதும் உள்ள கடல்களுக்கு மிகப்பெரிய எதிரியாக பிளாஸ்டிக் காணப்படுகின்றது.

இலங்கையில் இதேபோன்று பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 2025 ஆம் ஆண்டளவில் 17.5 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கடலில் படிந்து விடும். சில நேரத்தில் இதன்அளவு மேலும் அதிகரிக்க கூடும்.

இவ்வாறு பிளாஸ்டிக் சேரும் கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும். கடல் உயிர்கள் அழிந்து போனால் ஒக்ஸிஜன் இல்லாம் பாரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாக்கடல் என்பது முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட ஓர் உவர் நீரேரி ஆகும். இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது.

சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. இதன் காரணமாக இதனை சாக்கடல் என அழைக்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net