கடத்தி கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு!

கடத்தி கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு!

காலி-ரத்கமயில் கடத்தப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் எலும்கூடுகள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்க்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் மற்றும் 33 வயதுடையவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டு, பின்னர் வலஸ்முல்ல, மெதகொட பிரதேச வனப்பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net