காங்கேசன்துறையில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரி கைது!

காங்கேசன்துறையில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரி கைது!

கொழும்பில் 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று, காணாமலாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து, மேலுமொரு கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரியே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கைதாகும் கொலையாளிகளை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net