வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்கின்றனர்.

இதன்போது அவர்களிடமிருந்து நுட்பமான முறையில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்களின் பணத்தை திருடும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிக்கடுவ சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த பயணிகளின் பணம் திருடப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் உணவு பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது, அவர்கள் தங்கியிருந்த அறைகளின் ஜன்னல்களை உடைத்து திருடர்களை கைவரிசையை காட்டுகின்றனர்.

பயணிகள் அறையில் இருந்து வெளியே செல்லும் ஐந்தாவது நிமிடம் முதல் இந்த குடும்பல் உள்ளே நுழைந்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குடும்பல் பணத்தை இலக்கு வைத்தே செயற்படுவதாக ஹோட்டல்களை நடத்தும் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

பணம் கொள்ளையிடும் திருடர்களிடம் மிகவும் கவனமாக செயற்படுமாறு இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறவுறுத்தப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net