தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்!

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்!

இன்றைய தினம் (25)காலை 10.00 க்கு பிரிட்டன் பிரதமர்அலுவலகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இற்றைக்கு 2 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அது தொடர்பாக எந்தவொரு காத்திரமான தீர்வினையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பதே உண்மை.

வெறும் அற்ப சொற்ப விடயங்களை மேற்கொள்ள மட்டும் ஒரு பணியகத்தை சர்வதேசத்தை சமாளிப்பதற்காக நிறுவிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை வழங்குவோம் என்று தம்பட்டம் அடித்து வருகின்றது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களில் முக்கியமானவை எவற்றையும் இந்த அரசு செய்யத்தவறியுள்ளது.

இதனைவிட பல்லாண்டுகளாக விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் வதைபட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு , தமிழ் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு கரிசனையும் இந்த நல்லாட்சி அரசு காட்டவில்லை.

என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நடைபெற்றதுடன் பிரித்தானியா இன்றைய தினம் ஆரம்பிக்கும் 40வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கிய பங்காற்றுவதுடன் இலங்கைக்கு மேலும் கால நீடிப்பை வழங்காது சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net