கொக்கேய்ன் பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்?

கொக்கேய்ன் பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்?

கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமது பட்டியலில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளேடு ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொக்கேய்ன் போதைப்பொருளுக்கு மேலதிகமாக போதை மாத்திரைகள் உள்ளிட்ட வேறு போதைப்பொருட்களையும் பயன்படுத்துகின்றார்.

தனியார் உளவாளிகளின் ஊடாக குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிய விடயங்களை உறுதிப்படுத்தி கொண்டேன்.

இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பது பற்றியோ அவர் தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றாரா இல்லையா என்பது பற்றியோ ஊடகங்களுக்கு தகவல் வெளியிட முடியாது.

எதிர்வரும் காலங்களில் இது பற்றிய சகல விடயங்களையும் அம்பலப்படுத்துவேன்.

பதவிகள், ஏனைய வரப்பிரசாதங்கள் மற்றும் தனிப்பட்ட நட்பு போன்றவற்றை புறந்தள்ளி வீச போதைப்பொருட்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுகின்றேன்.

எனது அம்பலப்படுத்தல்களை அடுத்து கொக்கேய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு மருந்து வகைகளை பயன்படுத்தி வருகின்றனர் என கேள்விபட்டேன் என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net