ஜனாதிபதி- பிரதமரின் செயற்பாடு ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது!

ஜனாதிபதி- பிரதமரின் செயற்பாடு ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது!

ஜனாதிபதியின் தீர்மானத்தை பிரதர் மாற்றுகின்றார். அதேபோன்று பிரதமரின் தீர்மானத்தை ஜனாதிபதி மாற்றுகின்றார்.

இவ்வாறு செயற்படுவதால் முழுநாட்டிலும் ஒரு நிலையில்லாத தன்மை காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொக்கலயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டுக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் நிலையில்லாத தன்மை காணப்படுவதனால் முடிவெடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் தேவையான முடிவுகள் எடுக்கப்படாமல் ஒருவரின் கையிலிருந்து இன்னொருவரது கைக்கு சென்றே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் காலதாமதம் அதிகரித்துள்ளதுடன் மக்களுக்கான செயற்றிட்டங்களை கூட உரிய முறையில் நிறைவேற்ற முடியாத நிலமை உருவாகியுள்ளது.

இதனை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதேவேளை விவசாயத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய காலம் மிக விரைவில் ஏற்பட போகின்றது. அதில் மக்களின் தீர்மானமே முக்கியமாக காணப்படும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net