இலங்கையில் உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கஞ்சா செடி

உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கஞ்சா செடி வளர்ப்பு: அதிர்ச்சியில் பொலிஸார்!

இலங்கையில் உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஞ்சா செடி வளர்த்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாத்தாண்டிய, பனத்கொட பிரதேசத்திலேயே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3 – 4 அங்குல செடி மற்றும் 4 – 4 அடி உயரமான 1100 கஞ்சா செடிகள் குறித்த பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இச்செடிகளை வளர்ப்பதற்கு மிக உயர்ந்த விஞ்ஞான தொழிநுட்ப அறிவு பயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாத்தாண்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த கஞ்சா செடிகள் மரக்கறிப் பயிர்களுடன் சேர்த்துப் பயிரிடப்பட்டுள்ளதால் இலகுவில் கண்டு பிடிக்க முடியாமலிருந்ததாக பொரிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net