எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்!

எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்!

கிளிநொச்சி – உதயநகரில் இரண்டு காதுகளும் கேட்காத நிலையில் வாய் பேச முடியாது சிரமப்படும் சிறுவனுக்கு உதவுமாறு பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயநகரில் வசிக்கும் த.நேரியன்பன் என்னும் எட்டு வயதுச் சிறுவனுக்கு இந்திய மருத்துவமனையில் சத்திர கிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவரது குறைபாட்டைத் தீர்க்க முடியுமென மருத்துவர்களால் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.

அவரது சத்திர சிகிச்சைக்காக இருபத்தொரு இலச்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும், மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள தனது குடும்பத்தால் தனது மகனது சத்திர சிகிச்சைக்கு அந்தளவு பணத்தையும் திரட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் கருணை உள்ளங்கொண்டவர்களிடமிருந்து தமது மகனது சத்திர சிகிச்சைக்குத் தந்தையாரால் உதவி கோரப்பட்டுள்ளது.

இச்சிறுவனது குடும்பம் கடந்த கால யுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் கூலித் தொழில் செய்தே குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகின்றார்.

இச்சிறுவனது தாயாரும் வலிப்பு நோயாளியாகக் காணப்படுகின்றார். இந்நிலையில் இச்சிறுவனது மருத்துவ சத்திர சிகிச்சைக்காக வைத்தியர்களால் கோரப்பட்ட பணத்தினைத் திரட்ட முடியாது.

பெரிதும் அவலப்பட்டுக் கலங்கி நிற்கும் இவர்கள் கருணை உள்ளம் கொண்ட பரோபகாரிகளிடமிருந்து சத்திர சிகிச்சைக்கான பண உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

இச்சிறுவனது முகவரி

தர்மசீலன் நேரியன்பன், இல.230, உதயநகர் மேற்கு, கிளிநொச்சி. வங்கிக் கணக்கு இலக்கம்: 137020025321 (ஹற்றன் நசனல் வங்கி), தொலைபேசி இலக்கம் +94775079038 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு உதவ முடியும்.

மற்றும் மேலதிக தகவல்களுக்கு கிளிநொச்சி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தொலைபேசி இலக்கமான+ 94776913244 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேதிக தகவல்களை பெற்று கொள்ள முடியும்.  

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net