காணமால்போனோர் குறித்து ஆராய பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும்.

காணமால்போனோர் குறித்து ஆராய பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும்.

காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும் என காணமாலாக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக (புதன்கிழமை) காணமாலாக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் இலகுவான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால்போனவர்கள் குறித்து அலுவலகம் வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளையும் அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மேலும், காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்களின் உறவினர்கள் எமது அலுவலகத்தினூடாக இலகுவான சேவைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 1627 Mukadu · All rights reserved · designed by Speed IT net