காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்!

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்!

காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் இடமபெற்றுள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தின் உருவாக்கம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனினும், காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கை கடந்த காலத்தில் பாரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர் கொண்டிருந்தது.

அப்போது மக்கள் வீதிகளில் இறங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு போராடியார்கள்.

தனியொரு கட்சிக்காகவோ அல்லது தனியொரு நபருக்காகவோ அன்றி நாட்டினுடைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் தமது எதிர்கால சந்ததியினருக்காவும் அந்த போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்ததைய போராட்டங்கள் எந்தவொரு கட்சினாலும் ஒழுங்கு செய்யப்படாமல் சிவில் சமூக அமைப்புக்களாலும் இந்நாட்டு மக்களாலுமே ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

இவ்விடயத்தில் நீதித்துறை சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் செயற்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது.

எனவே ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளை தீர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net